கண்டி பல்கொன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் தெரிவுகாண் போட்டியில் கண்டி அணி மோசமான சரிவிலிருந்து மீண்டு பலமான நிலைக்கு திரும்பியுள்ளது .
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கண்டி அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி தலைவர் வனிது ஹசரங்கவின் சிறந்த துடுப்பாட்டம் காரணமாக இந்த மீள்சி கிடைத்தது. நிதானமாக ஆர்மபித்து அதிரடியாக ஆட்டமிழக்காமல் நிறைவு செய்தார். அவரோடு இணைந்து அஷேன் பண்டார நல்ல இணைப்பாட்டத்தை வழங்கினார். கஸூன் ரஜித்தவின் முதல் ஓவரிலேயே ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் இழந்து தடுமாறியது கண்டி. கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டார ஆகியோர் இணைப்பாட்டத்தை ஏற்படுத்திய வேளையில் 42 ஓட்டங்களில் விக்கெட் வீழ்த்தப்பட்டது.
அதன் பின்னர் அஷேன் பண்டாரவுடன் வனிந்து இணைந்தார். இருவரும் 92 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தார்கள்.
கஸூன் ரஜித்த இன்றும் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். இலங்கை அணிக்குள் தொடந்தும் பந்துவீசக்கூடிய நிலையினை அவர் உருவாக்கியுள்ளார். இணைப்பாட்டம் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் உடைத்து கொடுத்தவர் கஸூன் ரஜித்த. நான்கு விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.
பெறப்பட்டுள்ள இந்த இலக்கினை கொழும்பு அணி துரத்தியடிக்க போராடவேண்டிய நிலை ஏற்படும். கண்டி அணியின் பந்துவீச்சு பலமானது. கொழும்பு அணியின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் கடந்த போட்டி போன்று சிறப்பாக துடுப்பாடினால் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | L.B.W | கஸூன் ரஜித்த | 02 | 03 | 0 | 0 |
| அன்றே பிளட்சர் | L.B.W | கஸூன் ரஜித்த | 00 | 01 | 0 | 0 |
| கமிண்டு மென்டிஸ் | Bowled | மொஹமட் நபி | 23 | 29 | 1 | 1 |
| அஷேன் பண்டாரா | பிடி – பென்னி ஹோவெல் | கஸூன் ரஜித்த | 40 | 42 | 2 | 0 |
| வனிந்து ஹஸரங்க | 77 | 34 | 8 | 3 | ||
| பேபியன் அலன் | Bowled | கஸூன் ரஜித்த | 00 | 01 | 0 | 0 |
| கார்லோஸ் ப்ராத்வைட் | 15 | 05 | 1 | 1 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 143 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ரஜித்த | 04 | 00 | 20 | 04 |
| சுரங்க லக்மால் | 04 | 00 | 27 | 00 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | 04 | 00 | 32 | 01 |
| மொஹமட் நபி | 04 | 00 | 33 | 01 |
| சீக்குகே பிரசன்ன | 01 | 00 | 13 | 00 |
