முதல் முறையாக கொழும்பு இறுதிப் போட்டியில்

கண்டி பல்கொன்ஸ் அணியினை வெற்றி பெற்று கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 169 எனும் கடினமான இலக்கினை துரத்தியடித்தே இந்த வெற்றியினை பெற்றுக் கொண்டது கொழும்பு அணி. கடந்த போட்டியில் வெற்றியினை பெற்றுக் கொண்ட அதே போபரா – மத்தியூஸ் ஜோடியே இந்தப் போட்டியிலும் வெற்றி இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

கொழும்பு அணி 18.2 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆரம்ப விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், டினேஷ் சந்திமால், சரித அசலங்க ஜோடி இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 107 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் மூலமாகவே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. சரித் அசலங்க அதிரடியாக துடுப்பாடி பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் அணிக்கு பெரிதும் கைகொடுத்தது. இந்தியாவுக்கு இலங்கை அணி செல்லவுள்ள நிலையில் அவரின் போர்ம் மீளப்பெறப்பட்டமை இலங்கை அணிக்கு பலமாக அமையும்.

இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்ட பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களான போபரா – மத்தியூஸ் ஜோடி இலகுவாக வெற்றியிலக்கை துரத்தி பிடித்தது. 18 ஆவது ஓவரில் வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சினை பதம் பார்த்தார்கள் இருவரும். அதன் பின்னர் வெற்றி இலகுவானது.

கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது தெரிவுகாண் போட்டியான இந்தப் போட்டியில் கண்டி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்ப விக்கெட்களை இழந்து தடுமாறிய கண்டி அணிக்கு அணி தலைவர் வனிது ஹசரங்கவின் சிறந்த துடுப்பாட்டம் காரணமாக மீள்சி கிடைத்தது. நிதானமாக ஆர்மபித்து அதிரடியாக ஆட்டமிழக்காமல் நிறைவு செய்தார். அவரோடு இணைந்து அஷேன் பண்டார நல்ல இணைப்பாட்டத்தை வழங்கினார். கஸூன் ரஜித்தவின் முதல் ஓவரிலேயே ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் இழந்து தடுமாறியது கண்டி. கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டார ஆகியோர் இணைப்பாட்டத்தை ஏற்படுத்திய வேளையில் 42 ஓட்டங்களில் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் அஷேன் பண்டாரவுடன் வனிந்து இணைந்தார். இருவரும் 92 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தார்கள்.

கஸூன் ரஜித்த இன்றும் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். இலங்கை அணிக்குள் தொடந்தும் பந்துவீசக்கூடிய நிலையினை அவர் உருவாக்கியுள்ளார். இணைப்பாட்டம் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் உடைத்து கொடுத்தவர் கஸூன் ரஜித்த. நான்கு விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.

முதல் சுற்றுப் போட்டிகளில் 06 வெற்றிகளை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்ட கண்டி அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான இரண்டு போட்டிகளிலும் தொல்வியடைந்து மூன்றாமிடத்தில் தொடரை நிறைவு செய்துள்ளது.

கொழும்பு அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை ஜப்னா கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிஷான் மதுசங்க    பிடி – பத்தும் நிஸ்ஸங்ககார்லோஸ் ப்ராத்வைட்110810
டினேஷ் சந்திமால்Bowledகமிந்து மென்டிஸ்383331
சரித் அசலங்கRun Out 644073
ரவி போபரா  291631
டொமினிக் ட்ரேக்ஸ்பிடி – பேபியன் அலன்.கமிந்து மென்டிஸ்020200
அஞ்சலோ மத்தியூஸ்  211302
       
       
       
       
       
உதிரிகள்  04   
ஓவர்  18.5விக்கெட்  04மொத்தம்169   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
இசுரு உதான02001100
கார்லோஸ் ப்ராத்வைட்03003101
சாமிக்க கருணாரட்டன01000400
வனிந்து ஹஸரங்க03001900
ஒஷேன் தோமஸ்01001900
பேபியன் அலன்.03002800
கமிந்து மென்டிஸ்04002602

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கL.B.Wகஸூன் ரஜித்த020300
அன்றே பிளட்சர்L.B.Wகஸூன் ரஜித்த 000100
கமிண்டு மென்டிஸ்Bowledமொஹமட் நபி232911
அஷேன் பண்டாராபிடி – பென்னி ஹோவெல்கஸூன் ரஜித்த404220
வனிந்து ஹஸரங்க  773483
பேபியன் அலன்Bowledகஸூன் ரஜித்த000100
கார்லோஸ் ப்ராத்வைட்  150511
       
       
       
       
       
உதிரிகள்  08   
ஓவர்  20விக்கெட்  07மொத்தம்143   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித்த04002004
சுரங்க லக்மால்04002700
டொமினிக் ட்ரேக்ஸ்04003201
மொஹமட் நபி04003301
சீக்குகே பிரசன்ன01001300
பென்னி ஹோவெல்03004000
முதல் முறையாக கொழும்பு இறுதிப் போட்டியில்

Social Share

Leave a Reply