புத்தாண்டு வாழ்த்துகள்!

மலர்ந்துள்ள 2023 ம் ஆண்டு அனைவருக்கும் சுபீட்சமும் சௌபாக்கியமும் நிறைந்த ஆண்டாக அமைய வீ மீடியாவின் (V MEDIA) மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இன, மத, பேதங்கள் எதுவுமின்றி ஒரே தேசத்தவராய் ஒன்றிணைந்து நம் தாய் திருநாட்டை மீண்டும் கட்டியெழுப்பிடுவோம். பொருளாதார ரீதியிலும், புதிய அபிவிருத்தி திட்டங்களினாலும் இனிவரும் காலங்கள் அனைத்தும் இனிமையாகட்டும். துன்பங்கள், துயரங்கள் நீங்கிடட்டும். நாம் பெற்ற சுதந்திரம் நாட்டிலும் நம்மிலும் நிலைகொள்ளட்டும்.

தமிழ் அன்னையால் பிணைக்கப்பட்டுள்ள உலக வாழ் தமிழ் மக்கள் அனைவரும் என்றும்போல் இப்புத்தாண்டிலும் ஒரே குரலாய் இணைத்திருப்போம். இந்த புதிய ஆண்டில் உங்கள் கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகி, உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இன்பமும் அமைதியும் பெருகிடட்டும். தன்னம்பிக்கையோடும், புதிய நல்லெண்ணங்களோடும் மனமுவந்து இப்புத்தாண்டை வரவேற்போம்!

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள் – வீ மீடியா குழு.

Social Share

Leave a Reply