இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முடியாது!

முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி அவசியமாகும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டையை இறக்குமதி செய்ய அரசு எடுத்த தீர்மானத்துக்கு அமைய விடுக்கப்பட்ட டெண்டர் அழைப்புக்கு முன் வந்த சர்வதேச விநியோகஸ்தர்களின் 90 வீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், முட்டைகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் இல்லையென்றாலும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதை அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்தால், அந்த நாடு பறவைக் காய்ச்சல் தொற்று அற்ற நாடாக இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அண்மைக்காலமாக இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், தற்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முடியாது!

Social Share

Leave a Reply