கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான “ரீ யூனியன்” தீவிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயன்ற 46 இலங்கையர்கள் அங்கு கைது செய்யப்பட்ட மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதியன்று “ரீ யூனியன்” தீவிற்குள் நுழைந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானம் மூலம் நேற்று (13.01) இவர்கள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 2ம் திகதி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடிக் கப்பல் ஒன்றின் மூலம் இவர்கள் பிரான்ஸ் செல்ல முற்பட்டுள்ளதாகவும், இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அலாவத்தை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி தெஹிவளை பகுதியை சேர்ந்த ஆட்கடத்தல்காரர் ஒருவர், ஒவொருவரிடமிருந்தும் தலா 2 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.