நேபாளம் – பொக்காராவில் இன்று காலை விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 68 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேரை ஏற்றிச் சென்ற யெட்டி ஏர்லைன்ஸ் விமானம் மலைப்பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் நான்கு பணியாளர்கள், இரு கைக்குழந்தைகள் உள்ளிட்ட 72 பேர் பயணித்துள்ளனர்.
விமானத்தில் ஐந்து இந்தியர்கள், நான்கு ரஷ்யர்கள், ஒரு ஐரிஷ் நாட்டவர், இரண்டு தென் கொரியர்கள், ஒரு அவுஸ்திரேலியர், ஒரு பிரெஞ்சு மற்றும் ஒரு அர்ஜென்டினா நாட்டவர்கள் இருந்ததாக நேபாள விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான 14 மலைகளில் 8 மலைகளைக் கொண்ட நேபாளத்தில் விமான விபத்துக்கள் அசாதாரணமானது அல்ல என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.