கோலி அபாரம், இலங்கை டபாரம்….

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (15/01/2023) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியான ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி அபார வெற்றியொன்றினை பெற்றுக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி இந்த தொடரை 3-0 என வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொடர்களிலும் இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா அணியின் அதிரடி துடுப்பாட்டத்தினாலும், அபார பந்துவீச்சாலும் இந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றது. இதில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 166(110) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் 116(97) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 42(49) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 38(32) ஓட்டங்களையும் பெற்றனர்.

விராத் கோலி 46 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு அணிக்கெதிராக ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் 10 சதங்கள் பெற்றுக் கொண்ட வீரர் என்ற வரலாற்று சாதனையினை தனதாக்கினார்.

பந்துவீச்சில் கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 22 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினாரகள்.

இந்தியா அணி 317 ஓட்டங்களினால் பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

ஒரு நாள் சர்வதேசப் போட்யில் ஓட்ட எண்ணிக்கை அடிப்படையில் பெறப்பட்ட பெரிய வெற்றியாக இந்தியா அணி சாதனை படைத்துள்ளது.

கோலி அபாரம், இலங்கை டபாரம்….

Social Share

Leave a Reply