588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் சிறைச்சாலைகளின் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.

மேலும், சிறைச்சாலைகளில் நன்நடத்தை நிரூபிக்கப்பட்ட 31 கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தகுதி பெற்றுள்ளனர் என சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply