சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

நாளை காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மற்றும் எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி அங்கத்தவர்கள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என SJBயின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் கிடைத்துள்ள போதிலும் எவரும் கலந்துகொள்ள போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில் சுதந்திரக் கொண்டாட்டத்தில் நிதியை வீணடிக்கக் கூடாது என்ற கட்சியின் சித்தாந்தமே இந்த புறக்கணிப்புக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply