இலங்கை படைகளுக்கு பாகிஸ்தான் பக்கபலமாக இருக்கும்!

பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, இலங்கை ஆயுதப் படைகளுக்கு தனது முழு ஆதரவையும் வழங்க தயார் என உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (OCDS) அலுவலகத்தில், இலங்கை பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவ இராஜதந்திரத்தின் மூலம் பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ விமானத்தின் சேவைத்திறன் பற்றிய கலந்துரையாடலைத் தொடர்ந்து, இராணுவ விமான வசதியை வலுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மகிழ்ச்சியான இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த இரு பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பாதுகாப்பு தொடர்பான பல விடயங்களை சுமுகமாக கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், பாக்கிஸ்தானில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகள் மற்றும் வசதிகள் விரிவான முறையில் கிடைத்தமைக்காக ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றி தெரிவித்ததுடன், பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர், இரு அதிகாரிகளும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை படைகளுக்கு பாகிஸ்தான் பக்கபலமாக இருக்கும்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply