சர்வதேச கிரிக்கெட் பேரவையின் எட்டாவது மகளிர் T20 உலகக்கிண்ணம் இன்று தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கிறது. மகளிர் உலக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு. ஐந்து தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர். நடப்பு சம்பியனும் அவர்களே. இங்கிலாந்து இரு தடவையும், மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை அணி சகல தொடர்களிலும் விளையாடியுள்ளது. இதுவரை முதல் சுற்றை தாண்டவில்லை. 20 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளார்கள். கடந்த காலங்களிலும் பார்க்க இந்த முறை இலங்கை அணி பலமாக காணப்படுகிறது. முதல் சுற்றை தாண்டி, அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் ஓரளவு காணப்படுகின்றன.
இந்தியா அணி கடந்த முறை இறுதிப் போட்டி வரை தகுதி பெற்றது. மகளிர் உலகக்கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே பலமான அணிகளாக களமிறங்கும். ஆனால் இம்முறை இந்தியா அணி மிகவும் பலமாக சென்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி சொந்த நாட்டில் சிறப்பாக விளையாடும். இலங்கை அணி சவால் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கை அணி குழு A இல் இடம் பிடித்துள்ளது. இலங்கையோடு பலமான அணிகள் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
குழு B இல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
குழு நிலையியல் சகல அணிகளும் தங்களுக்குள் மோதி, குழு நிலையில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும்.
இன்றைய முதற் போட்டி இரவு 10.30 இற்கு தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையில் ஆரம்பிக்கவுள்ளது. நாளை முதல் 6.30 மற்றும் 10.30 இற்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் கிண்னத்தை வெல்லும் அதிக வாய்ப்புகள் உள்ள அணிகளாக இந்த உளக்காக்கிண்ணத்தில் விளையாடுகின்றன.