பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்து கொன்ற தாய்!

பயாகல ஹல்கந்தவில, கந்தகஹவில பிரதேசத்தில் ஏழு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட குழந்தை, குறித்த பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்திகளில் இளைய குழந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15ம் திகதி குழந்தை படுக்கையில் இருந்து விழுந்ததாக கூறி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அதன் பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இது கொலை என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் குழந்தையை தரையில் மூன்று தடவை நடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்து கொன்ற தாய்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply