12 மணிநேர நீர் வெட்டு!

வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.02) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிக்கட முல்லை, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா, மருதானை வீதி ஹுனுபிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும்.

களனி, பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

12 மணிநேர நீர் வெட்டு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply