தென்னாபிரிக்கா முதற் தடவையாக உலககிண்ண இறுதியில்

ICC T20 மகளிர் உலககிண்ணத்தில் இன்று (24.02) இங்கிலாந்து மகளிர் மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் கேப் டௌனில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 ஓட்டங்களினால் வெற்றி பெற்று முதலாவது தடவையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் தஸ்மின் பிரிட்ஸ் 68(55) ஓட்டங்களையும், லௌரா வொல்வேர்ட் 53(44) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சோபி எக்கெல்ஸ்டன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. இதில் நட் ஸ்கைவர் புருன்ட் 40(34) ஓட்டங்களையும், ஹீதர் க்னைக்ட் 31(25) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அயபொங்க காக்கா 4 விக்கெட்களையும், ஷப்னிம் இஸ்மைல் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகியாக தஸ்மின் பிரிட்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

வி. பிரவிக்
தரம் – 04

தென்னாபிரிக்கா முதற் தடவையாக உலககிண்ண இறுதியில்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply