பறவைக் காய்ச்சல் தொடர்பில் மீளாய்வு செய்ய தீர்மானம்!

உலக சுகாதார நிறுவனம் பறவைக் காய்ச்சலின் உலகளாவிய அபாய மதிப்பீட்டை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது.

கம்போடியாவில் காணப்படும் பறவைக் காய்ச்சலால் இருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் பறவைக் காய்ச்சலால் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், அவரது தந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே உலகளாவிய ரீதியில் இதன் பாதிப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த உலக சுகாதார நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் தொடர்பில் மீளாய்வு செய்ய தீர்மானம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply