பல நாடுகளில் கடல் உள்வாங்கப்பட்டுள்ளது!

கடந்த 36 மணி நேரத்தில் பல நாடுகளில், குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளில் கடல் நீர் மட்டம் உள்ளவாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அந்த நாடுகளில் உள்ள மக்கள் பெரும் பதட்டத்திலும் அச்சத்திலும் உள்ளதாகத் சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக, சகோதரமொழி ஊடகமொன்று சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் சிரியா, எகிப்து, மொராக்கோ, லிபியா, லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், துருக்கி, இத்தாலி, கிரீஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளதாக செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று துருக்கியிலும், இன்று இஸ்ரேயலிலும் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் முதன்முறையாக கடல் மட்டம் சுமார் 10 முதல் 15 மீற்றர் வரையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அண்மைய காலமாக உலகில் அதிக பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகிவரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமான செய்திகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

2004ம் ஆண்டு சுனாமிக்கு முன்னரும் கடல் உள்வாங்கப்பட்டிருந்தது. எனினும் மக்கள் பதற்றப்படாது, அவதானமாக இருப்பது பாதுகாப்பானது என்பதையும் அறியத்தருகின்றோம்.

 

 

பல நாடுகளில் கடல் உள்வாங்கப்பட்டுள்ளது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply