ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவின் கிழக்குப் பகுதியில் இந்த வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டு பல சேதங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 வினாடிகளுக்கு பின் அதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவி அறிவியல் மற்றும் தொற்றுநோயியல் நிறுவனம் (NIED) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.