இந்திய-இலங்கை பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் கச்சத்தீவு வருடாந்த திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு சுமார் 1,000 இந்திய பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவிற்காக போக்குவரத்து, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக தங்குமிடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் இலங்கை பக்தர்களுக்காக யாழ்ப்பாணம் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து கடற்படை படகு சேவையை இன்று முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.