மார்ச் 09 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைகுழு அறிவித்துள்ளது.
தேர்தலை நடாத்த தேவையான பணத்தை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நிதியமைச்சு மற்றும் உரிய மற்றைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அடுத்த வாரத்துக்குள் முடிவு எடுக்கப்பட்டு முடிவு 09 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்கப்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரா உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு தேவையான நிதியினை வழங்கமால் தடுப்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தடை வழங்க கோரிய அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கிலேயே இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.