ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07.03) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபைத் தேர்தல், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு கட்சி என்ற வகையிலான பங்களிப்பு மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.