ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழப்பு!

உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற செயலிழப்புகள் குறித்து ஆராயும் இணையதளமான Downdetector.com வழங்கியுள்ள தகவல்களின் படி, ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு தளத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழப்பு!

Social Share

Leave a Reply