வவுனியா குட்செட் வீதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் உடல்கள் குட்செட் வீதியிலுள்ள அவர்களது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு, தெற்கிலுப்பைக்குளத்திலுள்ள அவர்களது பூர்வீக இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று (10.03) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்த கெளஷீகனின் விளையாட்டு கழகமான யங் ஸ்டார்ஸ் விளையாட்டு கழகத்திலும் அஞ்சலிக்காக அவர்களது உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளில் இறப்பிற்கான காரணம் உறுதிசெய்யப்படாத நிலையில், மேலதிக இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகளுக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேலும் இந்த இறப்பு சம்பவம் கொலையா தற்கொலையா என்பதை உறுதி செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலரின் அஞ்சலிக்கும் கண்ணீருக்கும் மத்தியில் இந்த இளம் குடும்பம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இறப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மர்மம் தொடர்கிறது.