இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (09.03) கிறிஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 92.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 87(83) ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50(87) ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 47(98) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 46(59) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டிம் சௌதி 5 விக்கெட்களையும், மட் ஹென்றி 4 விக்கெட்களையும், மைக்கல் பிரேஸ்வெல் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடி வரும் நியூசிலாந்து அணி 63 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் டொம் லதாம் 67(144) ஓட்டங்களையும், துடுப்பாடிவருகின்ற டேரில் மிட்சல் 40(89) ஓட்டங்களையும், டெவோன் கொன்வே 30(88) ஓட்டங்களையும் பெற்றனர்.