பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

வீடுகள் உட்பட பல வர்த்தக நிலையங்களில் சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

‘கோட்டா’ என்ற புனைப்பெயர் கொண்ட குறித்த சந்தேக நபர் மொரட்டுவ மற்றும் எகொடஉயன பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொரலவெல்ல பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சந்தேகநபரால் திருடப்பட்ட பல கார் உதிரி பாகங்கள் மற்றும் வீட்டு மின் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

21 வயதுடைய சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரியவந்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Social Share

Leave a Reply