மேல்மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Western Breeze Festival – மாபெரும் உணவு திருவிழா – 2023 இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வத்தளை வெலிசர நவலோக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
மாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை இடம்பெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் உள்ளூர் உணவு வகை மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சீனா போன்ற வெளிநாட்டு உணவு வகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், உணவு பிரியர்கள் இவற்றை சுவைப்பதற்கான வாய்ய்பும் வழங்கப்படவுள்ளது.
சிறுவர்களுக்கான கேளிக்கை களியாட்டங்கள் உட்பட வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத்துறை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.