விமான டிக்கெட் விலைகள் சுமார் 20% வரை குறைக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப விமான டிக்கெட்டுகளின் விலைகளை குறைக்குமாறு இலங்கை விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விமானப்பயண டிக்கெட்டுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் விமான டிக்கெட் கட்டணங்களை மேலும் குறைக்கப்படும் என விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.