இன்று (21.03) காலை பொரலுகொட சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இரத்தினபுரிக்கும் பாணந்துறைக்கும் இடையில் இயங்கும் இந்த பயணிகள் போக்குவரத்து பஸ் தீப்பற்றி எறிந்ததில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

