தேர்தலை நடாத்தவும், பிற்போடவும் கோரிக்கை

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடாத்த முடியாது எனவும், இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு நடைபெறாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று(23.03) தேர்தலில் போட்டியிடும் கட்சிகளது செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இதனை கூறியுள்ளது.

இந்த சந்திப்பில் எதிர்கட்சிகள் அநேகமாக தேர்தலை நடத்துமாறு கோரிக்கை முன்வைத்துள்ளன. தேர்தலை நடாத்தும் சூழ்நிலை தற்போது இல்லையெனவும் அதனை பிற்போடுமாறும் சில காட்சிகள் கோரிக்கை முன் வைத்துள்ளன. அத்தோடு பிற்போடப்பட்ட திகதியில் தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டால் சகல கட்சிகளும், ஜனாதிபதியும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply