எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அந்நாட்டு மக்களவை செயலகம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராகுல் காந்தியின் இந்த பதவி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்து நடைமுறையாகும் என்று மக்களவை செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த பேசியதாகவும், பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply