வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
வசந்த முதலிகே மற்றும் அவருடன் இருக்கும் சிலர் யாழில் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், வசந்த முதலிகே உள்ளிட்டோரை யாழ் நகரில் போராட்டக் கூட்டங்களை நடத்த வேண்டாம் எனவும், தங்கள் நிம்மதியை கெடுக்க வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளின் கல்வியை பாதிக்கும், பொது மக்களின் வழமையை பாதிக்கும் எந்தவொரு ஒன்றுகூடலையும் நிகழ்த்த வேண்டாம் எனும் பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.