எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (27.03) நாரஹேன்பிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி எப்போதும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.