ஹிக்கடுவையில் இருந்து மருதானை நோக்கி பயணிக்கும் துரிதகாதி ரயில் சேவை மக்கொன பிரதேசத்தில் இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக களுத்துறை புகையிரத நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, காலி மற்றும் மாத்தறையில் இருந்து பயணிக்கும் அனைத்து ரயில்களும் சற்று தாமதமாக இயக்கப்படும் என்றும், களுத்துறை மற்றும் பாணந்துறையில் இருந்து புறப்படும் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.