இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (30.03) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில், 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தாம் இந்த நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply