தரம் ஒன்றில் கல்விகற்கும் மாணவர்களுக்கான அடிப்படை செயற்பாட்டு வாய்வழி ஆங்கில மொழித் திட்டத்தைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் நேற்று(30.03) பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டமானது, சமுத்திராதேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும், நாட்டின் எதிர்கால தொழில் துறைகளுக்கு ஏற்ற வகையில் நல்ல கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மாணவர்கள் தங்கள் பாடசாலை வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாளில், இப்பயிற்சியை வழங்குவதன் மூலம், அவர்களின் நன்நம்பிக்கை மேம்படுத்தலாம் எனவும் மேலும், இந்த திட்டத்திற்காக அமைச்சு ஏற்கனவே 13,800 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
