திங்கட்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்கங்க நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம்!

அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொழில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அசாதாரண வரி தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு தெரிவித்து இறுதி கடிதத்தை அனுப்ப தாம் தயாராக உள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்குபற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இன்று இது தொடர்பில் (31.03) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியின் பதிலின் அடிப்படையில் வேலைநிறுத்தம் நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து தொழிற்சங்கங்க நடவடிக்கை எடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply