பதுளையில் விபத்து இரண்டு மாணவர்கள் பலி!

பாடசாலைகளுக்கு இடையிலான வாகன அணிவகுப்பின்போது கெப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா மகா வித்தியாலயத்துக்கும் பதுளை தர்மதுதா வித்தியாலயத்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது வாகன அணிவகுப்பு மைதானத்தை சுற்றிச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply