முன்பள்ளி ஆசிரியை கொலை

கண்டி, பேராதனை, கொப்பேக்கடுவ பகுதியினை சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று(07.04) காலை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முறுத்தலாவ பகுதியை சேர்ந்த 25 வயதான அஞ்சலி சப்பா எனும் பெண், இன்று காலை பாடசாலைக்கு செல்லும் போது கொப்பேக்கடுவ பகுதியில் வைத்து குத்தப்பட்ட நிலையிலில் அவர் இலுக்கத்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்பள்ளி ஆசிரியை கொலை

Social Share

Leave a Reply