இலங்கை அணியுடனான 20-20 தொடரை வென்றது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 20-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றுள்ளது. இன்று(08.04) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடிய இலங்கை அணி ஒரு பந்து மீதமிருக்க தோல்வியினை சந்தித்தது.

லஹிரு குமராவின் இறுதி ஓவரில் 03 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்த போதும் நியூசிலாந்து அணியின் சிறந்த ஆரம்பம் காரணமாக அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பந்துவீச்சு மாற்றங்கள் சிறப்பாக அமையாமையும் தோல்விக்கு காரணமாக அமைந்து போயுள்ளது.

முதலில் துடிப்பாடிய இலங்கை அணி குஷல் மென்டிஸின் அபாரமான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி பலமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது. ஆரம்ப இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. பத்தும் நிஸ்ஸங்க 25(25) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். குஷல் பெரேரா 33(21) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். தனஞ்சய டி சில்வா 20(09) ஓட்டங்களை பெற்றார். குஷல் மென்டிஸ் 73(48) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரிம் செய்பேர்டின் சிறந்த 88(48) ஓட்டங்கள் மூலம் நல்ல ஆரம்பம் கிடைத்தது. ரொம் லெதாம் 31(23) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இறுதி ஓவரின் 2 விக்கெட்கள் அடங்கலாக லஹிரு குமார 03 விக்கெட்களை கைப்பற்றினார். மகேஷ் தீக்ஷண, ப்ரமோட் மதுஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இலங்கை அணியுடனான 20-20 தொடரை வென்றது நியூசிலாந்து

Social Share

Leave a Reply