புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களின் புழக்கம் தொடர்பில் பொது மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தகர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் தமக்குக் கிடைக்கும் நாணயத் தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.