மும்பைக்கு முதல் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று தமது முதல் வெற்றியினை பெற்று புள்ளிக்கணக்கை ஆரம்பித்துளளர்கள். மூன்றாவது போட்டியில் இந்த வெற்றியினை பெற்றுள்ளார்கள். டெல்லி அணி இதுவரையில் வெற்றியினை பெறவில்லை. நான்கு போட்டிகளிலும் டெல்லி அணி தோல்வியினை சந்தித்துள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதிப் பந்தில் வெற்றி மும்பை அணிக்கு கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்ற போதும் அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தமை அவர்களுக்கு அழுத்தத்தை வழங்கி கடினமான வெற்றியினை வழங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் அக்ஷர் பட்டேல் இறுதி நேரத்தில் தனித்து நின்று 54(25) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். டேவிட் வோர்னர் 51(47) ஓட்டங்களை ஆரம்பத்தில் பெற்றுக் கொடுத்தார். மானிஷ் பாண்டி 26(18) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜேசன் பெஹண்ட்ரொப், பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 03 விக்கெட்களையுயம், ரிலி மெர்டித் 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 71 ஓட்டங்களை வழங்கியது. இஷன் கிஷன் 31(26) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 65(45) ஓட்டங்களையும், திலக் வர்மா 41(29) ஒட்டங்களையும் பெற்றனர். 15.5 ஓவர்களில் 139 ஓட்டங்களை பெற்ற வேளையிலேயே இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட மும்பையின் தடுமாற்றம் ஆரம்பித்தது. முகேஷ் குமார் பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply