‘ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது’ – சஜித்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் அரசாங்கம் கொண்டு வர முயற்சிப்பதாகவும், இதன் ஊடாக சுதந்திர ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் ஊடாக அரசாங்கத்திற்குக் கீழ்படிந்து இணங்கும் பொம்மை ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதேச்சதிகார சர்வாதிகார ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை கொண்டுவந்து நாட்டின் ஊடகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உடனடியாக நிறுத்துவதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

-வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply