குஜராத்தின் பலம் தொடர்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (13.04) பஞ்சாபில் IPL இன் 18 ஆவது போட்டியாக நடைபெற்றது. குஜராத் அணி நேற்றைய போட்டியில் தங்களது பலத்தை வெளிக்காட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இதில் மத்தியூ ஷோர்ட் 36(24) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மோஹித் ஷர்மா 2 விக்கெட்களையும், ரஷீத் கான், அல்சாரி ஜோசெப், ஜோஷ் லிட்டில், மொஹமட் சாமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. இத்தில் ஷுப்மன் கில் 67(49) ஓட்டங்களையும், விரிந்திமன் சாஹா 30(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீட் பிரார், ககிஸோ ரபாட, சாம் கரண் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியின் நாயகனாக மோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

இன்று (14.04) கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் கொல்கத்தாவில் IPL இந்த 19 ஆவது போட்டியாக நடைபெறவுள்ளது.

குஜராத்தின் பலம் தொடர்கிறது.

Social Share

Leave a Reply