காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டாம் ஆணும் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாளை (20.04) முதல் அமுலுக்கு வரும் வகையில், மக்கள் ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மட்டுமே காலி முகத்திடலில் வளாகத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு சமய நிகழ்வுகளை மாத்திரம் நடத்த முடியும் எனவும் காலி முகத்திடலில் கள அபிவிருத்திக்காக சுமார் 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.