பதுளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுபாட்டையிழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (19.04) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி பெரகல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் ஹப்புத்தளையில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்ற வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply