புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமுர்த்தி தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில்!

சமுர்த்தி நிதியத்தில் இருந்து 816 இலட்சம் ரூபாவை செலவிட்டு நடத்தப்பட தீர்மானிக்கபட்டிருந்த சமுர்த்தி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22.04) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சமுர்த்தி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில், இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்து புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என அதன் தேசிய அமைப்பாளர் சாமர மத்தும களுகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் புள்ளிவிபரங்களை வழங்கி ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply