நாட்டின் பல பகுதிகளில் இன்று (26.04) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவு மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.