சூடானில் உள்ள இலங்கையர்களின் முதற்குழு பாதுகாப்பாக வெளியேற்றம்!

சூடான் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும் நிலையில் அங்கு சிக்கியிருந்த இலங்கையை சேர்ந்தவர்களின் முதல் குழு, சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் இவர்கள் வரவேற்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சூடானில் இருந்து இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கைகொடுத்த சவுதி அரேபிய இராச்சியத்திற்கு அமைச்சர் அலி சப்ரி தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், சூடான் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கிருந்து இலங்கை குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் இலங்கை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 15 அன்று சூடானில் இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே இடம்பெற்ற சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்டபட்டுள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகள் சூடானிலுள்ள தமது பிரஜைகளை மீட்க மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply