விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய மருத்துவர்கள் தயார்!

உயர்தர மாணவர்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படாமை கவலைக்குரிய விடயம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அரசாங்கத்தை மாற்ற ஒப்பந்தம் எடுக்கும் ஒரு குழுவினர் என்றும், அவர்களுக்கு இந்த நாட்டின் அபிவிருத்தி குறித்து எந்த உணர்வும் இல்லை, அதைப் பற்றி அக்கறையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய மருத்துவர்கள் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியதன் பின்னர் உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு பங்களிப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு விலகியுள்ளது.

Social Share

Leave a Reply