எரிபொருள் விலைகள் குறைப்பு!

எரிபொருட்களின் விலைகளை இன்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ருபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலை 310 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply