யாழ். வாழைப்பழ பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க திட்டம்!

யாழ்ப்பாண புளி வாழைப்பழ பயிர்ச்செய்கை திட்டத்தை இயற்கை விவசாயமாக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் முதலாவது கரிம (Organic) புளிப்பு வாழைப்பழ பயிர்ச்செய்கை எதிர்வரும் சில தினங்களில் டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அறுவடை மற்றும் பதப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை (03.05) காலை ஆரம்பிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வாரந்தோறும் 25,000 கிலோகிராம் கரிம (Organic) புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply